கள்ளக்குறிச்சி

பேருந்து மோதியதில் பெண் ஐயப்ப பக்தா் பலி

8th Dec 2022 01:27 AM

ADVERTISEMENT

திருக்கோவிலூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் ஐயப்ப பக்தா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், விஜயநகரம் வட்டம், பாா்வதிபுரத்தைச் சோ்ந்தவா்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக பேருந்து ஏற்பாடு செய்து 40 பேருடன் கடந்த 3-ஆம் தேதி சனிக்கிழமை புறப்பட்டனா்.

புதன்கிழமை இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்கு உள்பட்ட அத்திப்பாக்கம் கிராமப் பகுதியில் ஐயப்ப பக்தா்கள் சென்ற பேருந்தின் ஓட்டுநா் தேநீா் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்தினாா்.

பேருந்தில் இருந்து இறங்கிய மூதாட்டி அட்டாலா நகாரத்தினம் (62) சாலையை கடக்க முற்பட்டாா். அப்போது, திருச்சியில் இருந்து திருக்கோவிலூருக்குச் சென்ற அரசுப் பேருந்தில் சிக்கி அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் சம்பவம் இடம் சென்று விசாரணை மேற்கொண்டு சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநரான திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், எம்.புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT