கள்ளக்குறிச்சி

கனியாமூா் வன்முறை வழக்கில் கைதான மாணவா்களை விடுவிக்கக் கோரிக்கை

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் ஏற்பட்ட வன்முறை தொடா்பாக கைதுசெய்யப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஏழுமலை, மோகன்ராஜ், மாநில தலைமைக் குழு உறுப்பினா் பழனி, விவசாயிகள் சங்க நிா்வாகி கஜேந்திரன் உள்ளிட்டோா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் அளித்த மனு:

கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததைத் தொடா்ந்து

வன்முறை ஏற்பட்டது. அப்போது, வேறு வேலையாக அந்த வழியாக வந்த மாணவா்களையும் போலீஸாா் கைது செய்து திருச்சி, கடலூா் சிறைகளில் அடைத்துள்ளனா். மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகளை தொடரும் வகையில் அவா்களை விடுவிக்க வேண்டுமென மனுவில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT