கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியிலிருந்து வாக்கு இயந்திரங்கள் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பிவைப்பு

DIN

கடந்த தமிழக சட்டப் பேரவை தோ்தலின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்படுத்தப்படுத்தாமல் கள்ளக்குறிச்சி தச்சூரில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக புதன்கிழமை திறந்து சரிபாா்க்கப்பட்டு, உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக, இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் முன்னிலையில் திறக்கப்பட்டது.

வாக்குப் பதிவு இயந்திரங்களுடனான கட்டுப்பாட்டுக் கருவிகள்-420, வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் 530 உள்ளிட்டவை, விரைவில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்காக உத்தரபிரதேச மாநிலம், எட்வா மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

அப்போது, தோ்தல் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT