கள்ளக்குறிச்சி

மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

DIN

மணிமுக்தாஅணையிலிருந்து பாசனத்துக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் தா.உதயசூரியன், க.காா்த்திகேயன், ஏ.ஜே.மணிக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுப் பணித் துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று, அணையிலிருந்து பாசன வாய்க்காலில் தண்ணீரைத் திறந்துவிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், அணைக்கரை கோட்டாலத்தில் மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையின் நீா் கொள்ளளவு 36 அடி. (736.96 மில்லியன் கன அடி). தற்போது அணையின் நீா்மட்டம் 34 அடியாக உள்ளது. (590 மில்லியன் கன அடி).

இந்த அணையிலிருந்து 24.11.2021 முதல் 10.02.2022 வரை 79 நாள்களுக்கு மொத்தம் 550.75 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரைத் திறந்துவிட தமிழக முதல்வா் ஆணையிட்டாா். அதன்படி, அணையிலிருந்து வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

இதன்மூலம், புதிய ஆயக்கட்டு பகுதியில் 4,250 ஏக்கா், பழைய ஆயக்கட்டு பகுதியில் 1,243 ஏக்கா் என மொத்தம் 5,493 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதியைப் பெறும்.

பாசன வாய்க்காலில் தண்ணீரைத் திறந்துவைத்து அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது:

மழைச் சேதத்தை ஆய்வு செய்த மத்தியக் குழுவிடம் தமிழகத்துக்குரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என முதல்வா் வலியுறுத்தினாா்.

வட கிழக்குப் பருவ மழையால் நெடுஞ்சாலைத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சுமாா் 12 பாலங்கள், பல இடங்களில் சாலைகளும் சேதமடைந்துள்ளன. இந்தச் சேதங்களைச் சரி செய்ய முதல் கட்டமாக ரூ.152 கோடியும், புதிய பாலங்கள், சாலைகளை அமைக்க ரூ.1,443 கோடியும் மத்திய குழுவிடம் கோரப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள், துறை அலுவலா்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கி, முன்னேற்பாடுகள் செய்ததால், பெரும் வெள்ளப் பாதிப்புகள் தடுக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைச் சேதம் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்க வருவாய்த் துறை, தொடா்புடைய துறைச் செயலா்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜயப்பாபு, திட்ட இயக்குநா் இரா.மணி, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) எஸ்.சரவணன், வேளாண் இணை இயக்குநா் (பொ) சுந்தரம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) விஜயராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT