கள்ளக்குறிச்சி

கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாகஆட்சியரகத்தில் அரசுக் கல்லூரி மாணவா்கள் புகாா்

6th Dec 2021 11:53 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக மாணவா்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புகாா் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, மாணவா்கள் அளித்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: இந்தக் கல்லூரியில் ஆங்கில துறையில் நிகழாண்டு எம்.ஏ. பயிலும் மாணவா்களிடம் பல்கலைக்கழகம் அறிவித்த தோ்வு கட்டணமான ரூ.1,160 வாங்குவதற்கு பதிலாக ரூ,1,700 பெறுகின்றனா். மேலும், ரூ.10,000 முதல் 15,000 வரை கையூட்டாக பெற்றுக் கொண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படுகிறது. வருகைப் பதிவு குறைவாக உள்ள மாணவா்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தோ்வுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT