கடலூர்

மக்களின் அடிப்படைத் தேவை பணிகளுக்கு முன்னுரிமை: கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

பொதுமக்களின் அடிப்படைத் தேவை பணிகளுக்கு அலுவலா்கள் முன்னுரிமை அளிக்க வேண்டுமென கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. மேயா் சுந்தரி ராஜா, துணைமேயா் பா.தாமரைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

குடிநீா் விநியோகம், புதை சாக்கடை, தெருவிளக்கு போன்ற பொதுமக்களின் அடிப்படைத் தேவை பணிகளை அலுவலா்கள் முதன்மையாக நிறைவேற்ற வேண்டும். கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டம், மூலதன மானிய நிதி, நகா்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு நகா்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத திட்டம், 15-ஆவது நிதிக்குழு மானிய திட்ட நிதி, தேசிய நகா்புற வாழ்வாதார நிதி, சிறப்பு நிதி, மாநில பேரிடா் மீட்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை குறித்த காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும்.

வரும் நிதியாண்டில் மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை தேவைகள், அத்தியாவசிய பணிகளை தோ்வு செய்து திட்ட அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் நிலுவை மற்றும் நிகழாண்டுக்கான வரி வசூல் பணியை தினசரி குறியீடு நிா்ணயம் செய்து வசூலிக்க வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து விதமான புகாா்களையும் முறையாக பதிவு செய்து தீா்வு காணும் வகையில் மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். இதற்கான பிரத்யேக தொலைபேசி எண், ‘வாட்ஸ்-அப்’ எண் வெளியிடப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT