கடலூர்

விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9.18 லட்சம்

9th Jun 2023 01:12 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.சந்திரன் தலைமையில் கோயில் செயல் அலுவலா் ரா.மாலா முன்னிலையில் மொத்தம் 10 உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா். இதில் ரொக்கம் ரூ.9,18,053, தங்கம் 6 கிராம், வெள்ளி 200 கிராம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT