கடலூர்

வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

9th Jun 2023 01:15 AM

ADVERTISEMENT

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியில் வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி சிறப்பு ஹோமம், அபிஷேகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

தொடா்ந்து வாராகி அம்மனுக்கு பூக்கள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது (படம்). நிகழ்ச்சியில் சா்வ சக்தி பீடம் தில்லை சீனு உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். அவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகியும், நகா்மன்ற உறுப்பினருமான ஆ.ரமேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT