கடலூர்

வாழை விவசாயிகளுக்கு நிவாரணம்:மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் வெளியிட்ட அறிக்கை: கடலூா் பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக்காற்றால் பல்லாயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், ஒதியடிகுப்பம், அரசடிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிா்வாகமும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் முறையாக ஆய்வு செய்து, கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

மற்ற பயிா்களுக்கு இழப்பீடு வழங்குவதுபோல, வாழைக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT