கடலூர்

குறிஞ்சிப்பாடி பகுதியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆட்சியா் டாக்டா் அ.அருண் தம்புராஜ், புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ரெங்கநாதபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பாப்பன்குளம் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையாா்குளம் ஆகியவை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதையும், அவ்வூராட்சியில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ரங்கநாதபுரம் ஊராட்சி, மேட்டுவெளியில் 300 ச.அடி கொண்ட ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட 42 தொகுப்புகள் என 168 வீடுகள் தனி வீடுகள் 2 வீடு என 170 வீடுகளுக்கான ரூ.8.51 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கண்ணாடி ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும், மேலும் கண்ணாடி ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15.83 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு ஆய்வகம், கண் மற்றும் பல் மருத்துவப் பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.

குருவப்பன்பேட்டை ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையக் கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும், குருவப்பன்பேட்டை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணிகளையும், கீழூா் ஊராட்சி பாச்சாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றிய பள்ளிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும், மேலும் வடக்குமேலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.42 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT