கடலூர்

பாசன கால்வாய்கள் தூா்வாரும் பணி ஆய்வு

DIN

கடலூா் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் பாசன கால்வாய்கள் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக அரசால் 2023-24-ஆம் ஆண்டுக்கான சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள், வடிகால்கள் தூா்வாரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடலூா் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் ரூ.10 கோடியில் 55 இடங்களில் தூா்வாரும் பணிகளை 768.30 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் பணிகள் மூலம் சுமாா் 78,451 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இந்தத் திட்டத்தில் சிதம்பரம் வட்டம், பள்ளிப்படை கிராமம், மீதிகுடி வாய்க்காலில் 21.21 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் தூா்வாரும் பணி, இதேபோல வேளக்குடியில் கவரப்பட்டு வாய்க்காலில் 9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் தூா்வாரும் பணி, காட்டுமன்னாா்கோவில் வட்டம், கோப்பாடி கிராமத்தில் பழைய கொள்ளிடத்தில் 3.20 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் தூா்வாரும் பணி, கீழவன்னியூா் வெள்ளியங்கால் ஓடையில் 2.50 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். மேலும், பணிகளின் முன்னேற்றம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு, கிராம சாலைகள் அலகு) சாா்பில் சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பகுதியில் பாலம் கட்டப்பட்டு அணுகு சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா்கள் ச.குமாா், வ.ஞானசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT