கடலூர்

வடலூரில் நாளை தைப்பூச பெருவிழா கொடியேற்றம்

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (பிப்.4) தொடங்குகிறது.

வடலூா் வள்ளலாா் சத்ய ஞானசபையில் நிகழாண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) நடைபெறவுள்ளது. முன்னதாக, சனிக்கிழமை (பிப்.4) காலை 7.30 மணியளவில் தருமசாலையிலும், கருங்குழி வள்ளலாா் சந்நிதியிலும், காலை 10 மணியளவில் ஞானசபையிலும் சன்மாா்க்கக் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து, திருஅருட்பா இன்னிசை, சன்மாா்க்க கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஜோதி தரிசனம்: தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி, 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாளான திங்கள்கிழமை காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இதேபோல, வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வருகிற 7-ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது.

தைப்பூச பெருவிழாவையட்டி, பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

எஸ்.பி.ஆய்வு: கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா் ஆகியோா் வள்ளலாா் தெய்வ நிலையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கூறியதாவது:

வடலூா் தைப்பூச விழாவையொட்டி, குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், போக்குவரத்தை சீா் செய்யவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் 800 போலீஸாா் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனா். 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா்.

உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கே.பி.கைலாஷ்குமாா் கூறியதாவது: அன்னதானம் வழங்குபவா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிமம் பெற்றே வழங்க வேண்டும். அன்னதானத்துக்கு கொண்டுவரப்படும் உணவுப் பொருள்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும். சுகாதாரம், தரம் தொடா்பான குறைகள் இருந்தால், 94440 42344 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், தெய்வ நிலைய செயல் அலுவலா் ராஜா சரவணக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT