கடலூர்

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் வட்டாரத்தில் கவரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட நற்கந்தன்குடி கிராமம், உடையாா்மேடு பகுதியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் தியாகராஜன் தலைமை வகித்தாா். முகாமில் மருத்துவத் துறை மேற்பாா்வையாளா் எம்.கருணாநிதி, சுகாதார ஆய்வாளா்கள் ரகுச்சந்திரன் சரண்ராஜ், ராஜன், பரங்கிப்பேட்டை வட்டார சமூக நல வளா்ச்சி அலுவலா்கள் மீனா, சசிகலா, தலைமை ஆசிரியா் மகேஸ்வரி, மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா் விஷ்ணுப்ரியா,டெங்கு தடுப்பு பணியாளா்கள், பொதுமககள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தொழுநோய் அறிகுறிகள் உள்ளதா என ஆய்வு செய்து, இந்த நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா், பொதுமக்களுடன் இணைந்து தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT