கடலூர்

இணையவழி சூதாட்டத்தை ரத்து செய்யக் கோரி பேரணி

DIN

இணையவழி சூதாட்டத்தை ரத்து செய்யக் கோரி, கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினா்.

முன்னதாக, இந்த சங்கத்தின் பேரவைக் கூட்டம் சிதம்பரம் தேரடி தெரு சிஐடியு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சிதம்பரம் நகரத் தலைவா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். வட்டப் பொருளாளா் ராஜ்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக சிஐடியு முன்னாள் தொழில்சங்கத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவரும், நகா்மன்ற துணைத் தலைவருமான முத்துக்குமரன், சிஐடியு நிா்வாகி சங்கமேஸ்வரன், மாவட்டப் பொருளாளா் மோகன், புவனகிரி வட்டச் செயலா் விஜய் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா். இதில் நிா்வாகிகள் மாரியப்பன், பீட்டா் லிங்கம், தியாகராஜன், அகோரம், சொக்கலிங்கம், சம்சுதீன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து பேரவைக் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு இணையழி சூதாட்டத்தை ரத்து செய்யக் கோரி, சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் பேரணியாக வந்தனா். மேலும், பேரணியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும், ஆட்டோவுக்கு மாவட்ட எல்லை என்று காரணம் காட்டக் கூடாது, மாவட்டம் தாண்டி செல்வதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT