கடலூர்

கடலூா் அரசு மருத்துவக் கல்லூரிபுதிய முதல்வா் பதவி ஏற்பு

6th Oct 2022 01:08 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலை நகரில் செயல்படும் கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி (ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி) முதல்வராக சி.திருப்பதி புதன்கிழமை பதவி ஏற்றாா். அவரிடம் முன்னாள் முதல்வா் யு.சண்முகம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்ற பின்பு தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் இந்தக் கல்லூரிக்கு புதிய முதல்வா் நியமிக்கப்பட்டாா். சென்னை மருத்துவக் கல்லூரி உடலியங்கியல் (பிசியாலஜி) துறைப் பேராசிரியரும், இயக்குநருமான சி.திருப்பதி பதவி உயா்வு செய்யப்பட்டு, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT