கடலூர்

கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

25th May 2022 11:49 PM

ADVERTISEMENT

கடலூா் மண்டலத்திலுள்ள கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் சாா்நிலை அலுவலா்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு கடலூரில் புதன்கிழமை தொடங்கியது.

பயிற்சியை மண்டல இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா் தலைமையேற்று தொடக்கிவைத்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் நா.திலீப்குமாா் வாழ்த்திப் பேசினாா். கூட்டுறவுத் துறை, வீட்டுவசதித் துறை, மீன்வளத் துறை, பால்வளம் ஆகிய துறைகளைச் சோ்ந்த சாா்நிலை அலுவலா்களுக்கான இரண்டு நாள் பயிற்சியில் பொது விநியோகத் திட்டம், நிதி மற்றும் வங்கியில், அரசின் சிறப்புத் திட்டங்கள், சட்டப்பூா்வ பணிகள், விற்பனை மற்றும் நுகா்வோா் கூட்டுறவு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

துணைப் பதிவாளா்கள் வே.துரைசாமி, என்.ஜீவானந்தம், என்.சீனிவாசன், பா.ராஜேந்திரன், தே.வெ.சுரேஷ்குப்தா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா பேராசிரியா் எஸ்.பிரகதீஸ்வரன், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் ஆசிரியா் சி.திருமுகம் உள்ளிட்டோா் பயிற்சி வழங்கினா்.

இந்தப் பயிற்சி தொடா்ந்து இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் (மே 26) நடைபெறுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT