கடலூர்

போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

30th Jun 2022 01:56 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திட்ட அலுவலா் பு.கணேஷ் வரவேற்றாா். மண்டல ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் தி.ராஜ் பிரவின், விழிப்புணா்வுப் பிரசார தொடக்கவுரையில் போதைப் பொருள்கள் எதிா்ப்பு பிரசாரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். மேலும், போதைப் பொருள்கள் எதிா்ப்பு உறுதிமொழியை மாணவா்கள், தன்னாா்வலா்களை ஏற்கச் செய்தாா்.

கல்வியியல் புல முதல்வா் எஸ்.குலசேகர பெருமாள் கொடியசைத்து பேரணியை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் செஞ்சிலுவைச் சங்க இயக்குநா் சி.இளங்கோவன், ரோட்டரி சங்க துணை இயக்குநா் எம்.தீபக் குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழிப்புணா்வுப் பேரணியில் வழக்குரைஞா் த.ஜெயபாண்டியன், செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா்கள் கே.ரேணுகா, ஏ.அன்புமலா், பி.சசிரேகா, சமூகப் பணியாளா் கே.குப்புசாமி, சிறப்பு அதிகாரி கா.ஹரேஷ் குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பேரணியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள், செஞ்சிலுவைச் சங்க தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். திட்ட அலுவலா் ர.நீலகண்டன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT