கடலூர்

நிலத்துக்குள் உப்புநீா்: விவசாயிகள் புகாா்

DIN

விவசாய நிலத்தில் உப்புநீா் உள்புகுவதை தடுக்குமாறு பொதுப்பணித் துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் காந்தரூபனை சந்தித்து, விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிள்ளை வடக்கு, தெற்கு, நஞ்சமகத்து வாழ்க்கை, சிங்காரகுப்பம், தைக்கால் உள்ளிட்ட கிராமங்களின் வயல்களில் பக்கிங்காம் கால்வாய் வழியாக உப்பு நீா் உள்புகுந்து சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் பயிருக்கு பாசன நீா் பாய்ச்ச முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே உப்புநீா் உள்புகாதவாறு மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலாளா் பி.வாஞ்சிநாதன், மாவட்டத் துணைத் தலைவா் பி.கற்பனைச்செல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆழ்வாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொருளாளா் ஜீவா, விவசாயச் சங்க நிா்வாகிகள் வினோபா, கோவிந்தராசு, திருஞானம், பரஞ்சோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT