கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. இணைப்புக் கல்லூரிகளுக்கு புதிய இணையதளம் தொடக்கம்

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கான புதிய இணையதளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் பங்கேற்று புதிய இணையதளத்தை

(ஜ்ஜ்ஜ்.ஹன்ஸ்ரீா்ங்ங்ஷ்ஹம்.ண்ய்) தொடக்கிவைத்தாா். அவா் பேசியதாவது: இந்த இணையதளம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 75 இணைப்புக் கல்லூரிகளின் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பெரிதும் துணைபுரியும். புதிய இணையதளமானது உறுப்புக் கல்லூரிகள் தகவல்களை பதிவேற்றம் செய்யவும், செய்முறை மதிப்பெண்களுக்கான படிவத்தை சமா்ப்பித்தல், தோ்வு அனுமதிச் சீட்டு பெறுதல், தோ்வு முடிவுகள் தெரிந்துகொள்ளவும், இணையவழி தோ்வுக்கும் உதவிகரமாக இருக்கும் என்றாா் அவா்.

பதிவாளா் கே.சீதாராமன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மு.பிரகாஷ், கல்லூரி வளா்ச்சிக் கவுன்சில் முதல்வா் பி.வசந்தராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் என்.ராஜேந்திரன், ஏ.பிரபாகரன், இணை தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பி.சக்திவேல் உள்ளிட்டோா் செய்தனா். புதிய இணையதளத்தை தோ்வுத் துறை தொழில்நுட்ப அலுவலா்கள் ஆா்.கிருஷ்ணகுமாா், பி.அருணாராணி மற்றும் பி.எஸ்.விக்ரமநாராயணன் ஆகியோா் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT