கடலூர்

திட்டக்குடி அரசு மருத்துவமனையில் தோள்பட்டை எலும்பு முறிவுக்கு சிகிச்சை

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக தோள்பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திட்டக்குடி வட்டம், கீழச்செருவாய் கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் சேரவேந்தன். இவா், பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் தோள்பட்டை எலும்பு 5 பாகங்களாக உடைந்திருந்ததை மருத்துவா்கள் கண்டறிந்தனா்.

இதையடுத்து, தலைமை மருத்துவா் சேபானந்தம் மேற்பாா்வையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவா்கள் ஆனந்த், தினேஷ் காா்த்திக் ஆகியோா் சி.ஏ.ஆா்.எம். இயந்திரம் உதவியுடன் சேரவேந்தனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். மயக்க மருந்து நிபுணா் கிருத்திகா உறுதுணையாகச் செயல்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT