கடலூர்

வீடு புகுந்து திருட்டு: இளைஞா் கைது

12th Aug 2022 02:31 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம் நகரில் வீடு புகுந்து திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

சிதம்பரம் நகா் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அங்காளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சேதுராமன் (34) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா் கடந்த மாதம் சிதம்பரம் தெற்கு வாணியா் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவரது வீட்டுக் கதவை உடைத்து வெள்ளி விளக்கு, பணம் திருடியதும், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஸ்ரீமுஷ்ணத்தைச் சோ்ந்த சங்கீதா என்பவரிடமிருந்து 2 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சேதுராமனை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து 2 பவுன் நகை, 3 வெள்ளி விளக்குகளை பறிமுதல் செய்தனா். மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT