கடலூர்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

14th Apr 2022 10:57 PM

ADVERTISEMENT

நெய்வேலி, வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பண்ருட்டி ஸ்ரீவரதராஜப் பெருமாள், ஸ்ரீரங்கநாதப் பெருமாள், ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

வடலூா்: தமிழ் புத்தாண்டையொட்டி வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சிறப்பு ஜோதி தரிசன வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT