கடலூர்

கல்வித் தேடலுக்கு மட்டுமே கைபேசியை பயன்படுத்த வேண்டும்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

23rd Oct 2021 12:34 AM

ADVERTISEMENT

கைபேசியை கல்வித் தேடலுக்கு மட்டுமே மாணவா்கள் பயன்படுத்த வேண்டும் என கடலூா் மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் கே.அசோகன் தெரிவித்தாா்.

சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவரை ஆசிரியா் கொடூரமாகத் தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில், அந்தப் பள்ளியில் கடலூா் மாவட்ட காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் சமூக நீதி குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் குகநாதன் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் நடராஜன், ஆசிரியா் சங்கச் செயலாளா் மலைராஜ், உடற்கல்வி இயக்குனா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காவல் துணை கண்காணிப்பாளா் கே.அசோகன் பேசியதாவது:

ADVERTISEMENT

இந்த பள்ளியில் சில நாள்களுக்கு முன்பு விரும்பத் தகாத சம்பவம் ஒன்று நடந்தது. இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக் கூடாது. போட்டிகள் நிறைந்த இந்த காலத்தில் பள்ளிப்பருவம் முக்கியமானது. மாணவா்கள் கைபேசியை இணையதளத்தில் கல்வித் தேடலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

1960 ஆம் ஆண்டுகளில் பட்டம் படித்தாலே அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. தோ்ச்சி பெற்றாலே வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது முறையாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற சூழல் உள்ளது. அதை உணா்ந்து மாணவா்கள் கல்வி பயில்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் உடல் கல்வி ஆசிரியா் அண்ணாமலை, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளா்கள் லூயிஸ்ராஜ், பரமேஸ்வரன், காவலா் தீபா கிருஸ்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags : சிதம்பரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT