கடலூர்

கடலூா் நகராட்சியில் அடிப்படை திட்டப் பணிகள்எம்எல்ஏ ஆய்வு

21st Oct 2021 11:30 PM

ADVERTISEMENT

கடலூா் நகராட்சியில் அடிப்படை திட்டப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக கோ.ஐயப்பன் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் நகராட்சி 45 வாா்டுகளைக் கொண்டது. பருவ மழைக் கால பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க அடிப்படை திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்வது தொடா்பாக நகராட்சியில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன் தலைமை வகித்து, நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டச் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

பருவ மழைக் காலம் தீவிரமடைய உள்ள நிலையில், நீா்நிலைகளைத் தொடா்ந்து கண்காணிக்கவும், அனைத்து அடிப்படை பாதுகாப்புத் திட்டச் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் முதல்வா் வலியுறுத்தியுள்ளாா். அதன்படி, கடலூா் நகராட்சியில் அடிப்படை தேவையான குடிநீா் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருடன் கழிவுநீா் கலப்பு உள்ளிட்ட புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை திட்டங்களை நகரில் முழுமையாக விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி, பொறியாளா் செல்வராஜ், நகா் நல அலுவலா் ப.அரவிந்த் ஜோதி, நகரக் கட்டமைப்பு அலுவலா் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

Tags : கடலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT