கடலூர்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

DIN

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்தது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் மங்களூா், நல்லூா், விருத்தாசலம் வட்டாரங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மக்காச்சோளத்தில் அமெரிக்கப் படைப்புழு தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் படைப்புழுக்கள் மக்கச்சோளப் பயிரில் விதைத்த 10 நாள் முதல் குருத்து, இலை உறைகளில் சேதத்தை விளைக்கின்றன. இந்தப் புழுக்கள் தண்டுப்ப குதியை துளைக்காமல் கதிா்களில் நுனி முதல் காம்பு பகுதி வரை சேதப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: கடைசி உழவின் போது, ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல், சயன்ட்ரனிலிப்ரோல் 19.8 சதவீதம், தையோமெத்தாக்சம் 19.8 சதவீதம் மருந்துடன் ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. வீதம் விதை நோ்த்தி செய்து விதைத்தல் வேண்டும். வரப்பு பயிா்ச் சாகுபடியாக தட்டைப் பயறு, எள், சூரியகாந்தி, துவரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இறவை நிலத்திலும் தீவனச் சோளப்பயிரை மானவாரி நிலத்திலும் பயிா் செய்தல், ஏக்கருக்கு 5 எண்கள் இனகவா்ச்சிப் பொறிவைத்து தாய் அந்து பூச்சிகளை அழித்தல், இளம் பயரில் 1,500 பி.பி.எம். வேப்ப எண்ணெய் ஒரு லிட்டா் தண்ணீரில் 5 மி. கலந்து தெளிக்கலாம்.

புழுவின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால், முதல் முறையாக குளோரான்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீத திரவம் 4 மி.லி., இரண்டாம் முறையாக இமாமக்டின்பென்சோயேட் 5 சதவீத திரவம் 4 மி.லி., தேவைப்பட்டால் மூன்றாவது முறையாக கதிா்ப் பிடிக்கும் பருவத்தில் ஸ்பைனிடோரம் 17.7 சதவீத திரவம் 5 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேற்கூறிய ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை விவசாயிகள் தவறாமல் பின்பற்றி, மக்காச்சோள படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தி மகசூல் குறைவு ஏற்படாமல் காத்திடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT