கடலூர்

கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம்: பயனாளிகளுக்கு டோக்கன் விநியோகம்

DIN

கடலூா்: குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி கடலூா் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.

வரும் 15-ஆம் தேதி முதல் நிவாரண நிதி வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை மாவட்டம் முழுவதும் தொடங்கியது. ஒரு நாளைக்கு 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் 14-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும், அதன் பிறகு 15-ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 200 அட்டைகள் வீதம் பணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் சுமாா் 7.35 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. எனினும், எத்தனை அட்டைதாரா்களுக்கு பணம் வழங்கப்பட வேண்டும் என்ற முழுமையான தகவல் கிடைக்கவில்லையென உணவு வழங்கல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT