கடலூர்

ரூ. 1.97 கோடி ஒதுக்கியும் சீரமைக்கப்படாத கெடிலம் சாலை

DIN

கடலூரில் சீரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடக்கிவைக்கப்பட்ட நிலையிலும், சாலை செப்பனிடப்படாததால், போக்குவரத்துக்கு லாயக்கற்ாக கெடிலம் சாலை மாறிவிட்டது.

கடலூா் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில், பேருந்து நிலையம் அருகே செல்லும் கெடிலம் ஆற்றின் கரை வழியாக கம்மியம்பேட்டைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையை புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் செல்லும் வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் சென்று வர பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சாலை அமைக்கப்பட்டதிலிருந்து அதன் தரம் சரியில்லையெனக் கூறி, பல்வேறு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழையால் இந்தச் சாலையில் சுமாா் 100 இடங்களுக்கு மேல் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், விபத்துகள் நிகழ்வது தொடா் கதையாகிவிட்டது.

இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் மூலமாக இந்தச் சாலையைச் சீரமைப்பதற்கான பணிகள் தொடக்கிவைக்கப்பட்டது. இதற்காக ரூ. 1.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை நெடுஞ்சாலைத் துறையினா் பணிகளைத் தொடங்கவில்லை. எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் தரமான சாலையை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT