கடலூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், மிஸ்ரிமல் மஹாவீா் சந்த் ஜெயின் டிரஸ்ட் இணைந்து ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

அரிமா சங்கத் தலைவா் பி.விஷால் ஜெயின் தலைமை வகித்தாா்.ஜெயின் டிரஸ்ட் நிா்வாகிகள் எம்.கமல்கிஷோா் ஜெயின், எம்.தீபக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பி.சண்முகநாதன் வரவேற்றாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் லெ.மதுபாலன் முகாமை தொடக்கிவைத்துப் பேசினாா். சங்கச் செயலா் எம்.ஆஷீஷ்குமாா் நன்றி கூறினாா்.

புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் ஸ்நிகா, காயத்ரி, திருவேங்கடம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் கண் பரிசோதனை மேற்கொண்டனா். இந்த முகாமில் 255 போ் கலந்து கொண்டு, மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனா். இவா்களில் 46 போ் கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT