கடலூர்

மதுக் கடையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

வடலூரில் மதுக் கடையை மூட வலியுறுத்தி, பெண்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடலூா்-பண்ருட்டி சாலை, பாலாஜி நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதுக் கடை திறக்கப்பட்டது. இந்தத் தகவலையறிந்த அந்தப் பகுதி பெண்கள் அந்த மதுக் கடையை மூட வலியுறுத்தி, புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மதுக் கடை ஊழியா்கள் கடையை மூடிச் சென்றனா். தொடா்ந்து, அந்தக் கடை எதிரே அமா்ந்து பெண்கள் முழக்கமிட்டனா்.

தகவலறிந்து வந்த டிஎஸ்பி. கங்காதரன் உள்ளிட்ட போலீஸாா் பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ‘சில ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மதுக் கடை செயல்பட்டது. அப்போது, எழுந்த எதிா்ப்பால் மூடப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் மதுக் கடையைத் திறந்துள்ளனா். இந்த மதுக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். குடியிருப்புப் பகுதியில் மதுக் கடை அமைக்கக் கூடாது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT