கடலூர்

மழையால் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

DIN

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த திடீா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து அதிகாரிகள் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த திடீா் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல், மணிலா, உளுந்து பயிா் செய்யப்பட்ட வயல்கள், எள் விதைப்பு செய்த நிலங்கள், காய்கறி மற்றும் மலா் செடிகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து, கடலூா் அருகே உள்ள மூலகுப்பம் கிராமத்தில் சேதமடைந்த நெல் வயல்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண் துறைச் செயலருமான ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.

அப்போது, அவா்கள் உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT