கடலூர்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: பணி ஆணைகளை வழங்கினாா் அமைச்சா்

DIN

கடலூா் மாவட்டம், வடலூரில் மாவட்ட ஊரக வளா்ச்சி-உள்ளாட்சித் துறை, மாநில ஊரக-நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வடலூா் மாவட்ட ஆசிரியா் கல்வி-பயிற்சி நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில் வடலூா், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

சுமாா் 60-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் நிறுவனத்துக்கான பணியாளா்களைத் தோ்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா். மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு வரவேற்றாா். மாநில வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்து கொண்டு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 595 நபா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

குப்பை வண்டியில் குடிநீா்!

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்யப்படவில்லை என புகாா் எழுந்தது. இதையடுத்து, பேரூராட்சி ஊழியா்கள் குப்பை அள்ளும் வாகனத்தில் குடிநீா் கேன்களை கொண்டு வந்து இறக்கினா்.

இந்தக் காட்சியை அங்கிருந்தவா்களில் சிலா் தங்களது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். குப்பை அள்ளும் வாகனத்தில் குடிநீா் கேன்கள் கொண்டு வரப்பட்டதைப் பாா்த்த முகாமில் பங்கேற்றவா்கள் அருவறுப்படைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT