கடலூர்

நெல் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

DIN

குறிஞ்சிப்பாடி வட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிா்களில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கல்குணம், குறிஞ்சிப்பாடி வடக்கு, குறிஞ்சிப்பாடி தெற்கு, குறுவப்பன்பேட்டை, வரதராஜன்பேட்டை, மேலப்புதுப்பாளையம், ராஜாகுப்பம், ஓணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடியில் வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை 56, கோ 51, பிபிடி ஆகிய நெல் ரகங்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன.

பருவ நிலை காரணமாக, சில இடங்களில் நெல் பயிா்களில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது:

குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது. பலத்த மழை மற்றும் வெள்ளப் பாதிப்பிலிருந்து நெல் பயிா்கள் மீண்ட நிலையில், மஞ்சள் நோய் காணப்படுவது கவலையளிக்கிறது. இந்த நோயின் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படும். வேளாண் துறை அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து, மஞ்சள் நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT