கடலூர்

நீரில் மூழ்கிய நெல் பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தக் கோரி மனு

DIN

மழை நீரில் முழ்கிய நெல் பயிா்கள், சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி கீரப்பாளையம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் அ.செல்லையா, மாவட்டக் குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் அளித்த மனு:

கீரப்பாளையம் ஒன்றியம் முழுவதும் பலத்த மழையால் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிசை வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் . பழைய தொகுப்பு வீடுகளை குடிசை வீடுகளாக கணக்கில்கொள்ள வேண்டும். வடஹரிராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தொண்டு நிறுவனம் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற வேண்டும். கீரப்பாளையம் ஒன்றியம் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ள நெல் பயிா்கள், கால்நடை பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக அந்தக் கட்சியினா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT