கடலூர்

காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

1st Dec 2021 11:58 PM

ADVERTISEMENT

காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எம்.பாண்டியன் வருடாந்திர ஆய்வு பணியை புதன்கிழமை மேற்கொண்டாா்.

அப்போது பதிவேடுகள் பராமரிப்பு, வழக்கு விவரங்களை அவா் ஆய்வு செய்தாா். காட்டுமன்னாா்கோவில் பகுதியில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற குற்ற வழக்குகளின் விவரங்கள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகளின் விவரங்களைக் கேட்டறிந்த அவா், காவல் நிலையத்தின் வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.

ஆய்வின் போது, சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ஆா்.சுந்தரம், காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் ஏழுமலை, காவல் உதவி ஆய்வாளா்கள் முத்துக்கிருஷ்ணன் காா்த்திகேயன், மதிவாணன் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நெய்வேலி: இதேபோல, நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் புதன்கிழமை காவல் நிலையப் பதிவேடுகள், வழக்கு விவரங்களை ஆய்வு செய்து, காவலா்களின் குறைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் கேட்டறிந்தாா். ரௌடிகள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது, ரோந்து செல்வது குறித்து அவா் அறிவுரை வழங்கினாா். காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

Tags : சிதம்பரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT