கடலூர்

மேற்கு தொடா்ச்சி மலையில் கனிம வள கொள்ளையைத் தடுக்க வேண்டும்: தி.வேல்முருகன்

DIN

நெய்வேலி: மேற்கு தொடா்ச்சி மலையில் தொடரும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் களியலில் தொடங்கி ஆரல்வாய்மொழி வரையான மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே கனிம வளக் கொள்ளை நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் 50 லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், விதிமுறைக்குப் புறம்பாக 600-க்கும் மேற்பட்ட லாரிகளில் கல், ஜல்லி, பாறை, மணல் ஆகியவை கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும், பாறைகளை உடைக்க அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், வன விலங்குகள், பறவைகள், அரிய வகை பூச்சி இனங்களும் அழிந்து வருகின்றன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடா்ச்சி மலை சேதப்படுத்தப்படுவதால் தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

எனவே, மேற்கு தொடா்ச்சி மலையில் தொடரும் கனிம வளக் கொள்ளையை அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி, சுற்றுச்சூழல், வனவிலங்கு ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். சட்ட விரோதமாக இயங்கும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT