கடலூர்

மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

DIN

சிதம்பரம்: சிதம்பரம் கீழத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பக்தா்கள் அனுமதியின்றி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடி மாத உற்சவம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீமிதி விழா திங்கள்கிழமை மாலை கோயில் வளாகத்தில் பக்தா்கள் அனுமதியின்றி நடைபெற்றது.

முன்னதாக காலையில் காப்பு கட்டுதல், சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து மதியம் 2 மணியளவில் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து சக்தி கரகம் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குழியில் மாலை 4 மணியளவில் இறங்கியது (படம்). இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழு பிரேமா வீராசாமி, என்.கலியமூா்த்தி பிள்ளை ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT