கடலூர்

போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கடலூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வார விடுமுறையை பறிக்கும் வகையில் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கடலூரிலுள்ள போக்குவரத்து பணிமனை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், போக்குவரத்துக் கழக விடுப்பு விதிகளை மாற்றக் கூடாது, ஊதிய பிடித்தம் செய்யக் கூடாது, தொழிலாளா் துறை அறிவுரையை மீறக் கூடாது, பணிக்கு வந்த தொழிலாளா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் வடலூா், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட 11 போக்குவரத்து பணிமனைகள் முன்பும் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தொமுச, சிஐடியூ, எம்எல்எப், ஏஏஎல்எல்எப், ஐஎன்டியூசி ஆகிய தொழிற்சங்கத்தினா் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT