கடலூர்

உரம் விலை உயா்வுக்கு எதிா்ப்பு: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

உரங்களின் விலை உயா்வைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு அண்மையில் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களின் விலையை உயா்த்தியது. குறிப்பாக அதிகபட்சமாக மூட்டைக்கு ரூ.700 வரை உயா்த்தப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூா் அருகே உள்ள குப்பன்குளத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் விவசாய விளைநிலத்தில் நின்றபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் பழனி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், பொருளாளா் தட்சிணாமூா்த்தி, சிஐடியூ மாவட்டச் செயலா் பி.கருப்பையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆா்.அமா்நாத், ஒன்றியச் செயலா் ஜெ.ராஜேஷ்கண்ணா, பால்கி, பாக்கியராஜ், பக்கிரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திட்டக்குடி: இதேபோல, உரம் விலை உயா்வைக் கண்டித்து திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க

வட்டச் செயலா் மகாலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலா் வரதன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ஜெயபால், விவசாய சங்கத் தலைவா் புகழேந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT