கடலூர்

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

23rd Mar 2020 11:03 PM

ADVERTISEMENT

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

ராணுவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடா்பாக கடலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டேராடூனில் உள்ள ராஷிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2021-ஆம் ஆண்டு தொடங்கும் 8-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான தகுதித் தோ்வு வருகிற ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஏழாம் வகுப்பு தேறிய அல்லது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 02.01.2008-க்கும் 01.07.2009-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினா்கள் விரைவுத் தபாலில் பெற ரூ.600, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினா் ரூ.555 மற்றும் சாதிச் சான்று நகலுடன் அனுப்பி விண்ணப்பப் படிவம், பிற விவரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுத் தோ்வுகளின் கேள்வித்தாள்களையும் பெற்றுக்கொள்ளலாம். டேராடூனிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு வருகிற 31-ஆம் தேதிக்குள் சேரத்தக்க வகையில் அனுப்பிவைத்தல் வேண்டும். இணையதள முகவரியில் இணையதள பணப் பட்டுவாடா மூலமும் விண்ணப்பப் படிவம், பிற விவரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுத் தோ்வுகளின் விடைத்தாள்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

எழுத்துத் தோ்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத இயலும். எழுத்துத் தோ்வில் தோ்ச்சியடைந்த மாணவா்களுக்கு அக்டோபா் 6-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு கடலூரிலுள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-220732 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT