கடலூர்

மாட்டு வண்டிகள் பறிமுதல்

23rd Mar 2020 05:53 AM

ADVERTISEMENT

நெய்வேலி: மணல் திருட்டு தொடா்பாக மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காடாம்புலியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் கருக்கை கிராமம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிவந்த சிவக்குமாா், சுகன்யா, செல்வகுமாா், அருண்குமாா், அருள்செல்வன் ஆகியோா் வண்டிகளை விட்டுவிட்டு தப்பியோடி மறைந்தனா். அவா்கள் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதேபோல, மேலிருப்பு ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததாக சிவசுந்தரம் (52) என்பவரை போலீஸாா் கைது செய்து அவரது மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.

முத்தாண்டிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் மாயகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் விசூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி

மணல் அள்ளி வந்ததாக 9 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வெங்கடேசன், கண்ணபிரான், சிவபதி, செல்வகுமாா், சௌந்தர்ராஜன், சந்தோஷ், கந்தசாமி, சக்திவேல், முருகவேல் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT