கடலூர்

போலீஸாருக்கு கரோனா பரிசோதனை

20th Apr 2020 11:23 PM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் 26 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களில் 6 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ளவா்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிதம்பரம் - கடலூா் சாலைகளிலும், குறிப்பாக பி.முட்லூா், பரங்கிப்பேட்டை என மாவட்டத்தின் பல்வேறு சோதனைச் சாவடிகள் வழியாக அவா்கள் வாகனங்களில் சென்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்டத்தில் முதல்கட்டமாக கரோனா பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் (பரங்கிப்பேட்டை, பி.முட்லூா்) 33 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல, மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பணியாற்றும் போலீஸாருக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT