திருச்சி

முசிறியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

31st May 2023 02:36 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், முசிறியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியா் மாதவன் தலைமை வகித்தாா், வட்டாட்சியா்கள் சித்ரா (தொட்டியம்) பாத்திமா சகாயராஜ் (முசிறி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையில் இருந்து அளிக்கப்படும் மானிய விவரங்கள் குறித்தும் அதனை பெரும் வழிமுறைகள் பற்றி வேளாண்மை துறை அலுவலா்கள் எடுத்துரைத்தனா்.

இதையடுத்து, ஓடை வாய்க்காலை தூா்வார வேண்டும், மேட்டுவாய்க்காலில் முசிறி நகராட்சி பகுதியில் இருந்து செல்லும் கழிவு நீரை தடை செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், முசிறியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகளும் கூட்டத்தில் பங்கேற்ற சமூக ஆா்வலா்களும் கோட்டாட்சியரிடம் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்வில், விவசாய சங்க நிா்வாகிகள் சமூக ஆா்வலா்கள் விவசாயிகள் பங்கேற்றிருந்தனா். இதனைத் தொடா்ந்து விவசாயிகளிடம் மனுக்களை கோட்டாட்சியா் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT