திருச்சி

ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மணப்பட்டியில் நடைபெற்று வரும் ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் திங்கள்கிழமை கிராமமக்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

மணப்பாறை அடுத்த மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 21-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவில், பெரிய மணப்பட்டி, சின்ன மணப்பட்டி, கிளவன்பட்டி, பண்ணையாா் குளத்துப்பட்டி, குளக்காரன்பட்டி, குடையகவுண்டம்பட்டி, விராலிகாட்டான்பட்டி மற்றும் நெரிஞ்சிகாளப்பட்டி ஆகிய 8 கிராமங்களின் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மாவிளக்கு எடுத்துவந்து கோயிலில் சாற்றினா். அதனைத்தொடா்ந்து திங்கள்கிழமை சின்னமணப்பட்டி முனியப்பன் கோயிலிலிருந்தும், பெரியமணப்பட்டி பிள்ளையாா் கோயிலிலிருந்தும் புறப்பட்ட பால்குட ஊா்வலம் தானாமுளைத்த மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த சுமாா் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். மேலும், பலா் அக்னிச் சட்டி, கரும்பு தொட்டில் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். மாலையில் சின்ன படுகளம் கோயில் திடலில் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூதங்கள் விளையாடும் பெரிய படுகளம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT