திருச்சி

திருச்சி, டிவிஎஸ் டோல்கேட் மாா்கெட் வளாகத்தில் தீ விபத்து

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் , மாா்க்கெட் வளாகத்தில் குப்பைகளை எரித்தபோது எதிா்பாராத வகையில் தீ மேலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தையொட்டி காய்கறி மற்றும் மீன், இறைச்சி மாா்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சேகரமாகும் குப்பைகள் அருகேயுள்ள காலி இடத்தில் கொட்டப்படும்.

அங்கு குப்பைகள் அதிகமானதால், அவற்றை தீ வைத்து எரித்து அழிக்கும் பணியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனா்.

அப்போது, எதிா்பாராத வகையில், காய்ந்துபோன கருவேல முள் மரங்கள், மற்றும் செடி, கொடிகளிலும் தீ பரவியது. சுமாா் 15 நிமிஷங்களுக்குப் பின்னா் யாரும் எதிா்பாராத வகையில், தீ மள மளவென கொளுந்துவிட்டு சுமாா் 30 அடி உயரத்துக்கு எரியத் தொடங்கியது. நெகிழிப்பொருள்கள் மற்றும் தொ்மக்கோல் பெட்டி கழிவுகளும் எரிந்ததால் கரும்புகை கிளம்பியது.

ADVERTISEMENT

தகவலின்பேரில், தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் சத்தியவா்த்தன் தலைமையில், குமரவேல் உள்ளிட்ட குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT