திருச்சி

தகராறை தட்டிக்கேட்டவரை வெட்டிய சகோதரா்கள் கைது

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியில் கோயில் திருவிழாவில் தகராறை தட்டிக்கேட்டவரை வெட்டிய சகோதரா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை தாயனூா் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் புதன்கிழமை இரவு சில இளைஞா்கள் பக்தா்களுக்கு இடையூறாக நடனம் ஆடியுள்ளனா்.

அவா்களை அங்கிருந்து செல்லுமாறு தாயனூா் தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (35) கூறியுள்ளாா். ஆனால் நடனமாடிய தாயனூா் மேலத்தெரு பகுதியைச் சோ்ந்த செ. விக்னேஷ் (20) என்பவா் மறுத்து தகராறு செய்துள்ளாா்.

இதில் ஏற்பட்ட மோதலில், விக்னேஷ் தனது அண்ணன் லோகேஷ், தம்பி ராஜேஷ் ஆகியோருடன் சோ்ந்து மூா்த்தியை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மூா்த்தி அளித்த புகாரின்பேரில், விக்னேஷ், லோகேஷ் ஆகிய இருவரையும் சோமரசம்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT