திருச்சி

தோ்தல் முன்விரோதம் ஊராட்சிமன்ற பெண் உறுப்பினரை தாக்கிய ஒருவா் கைது: 2 போ் தலைமறைவு

24th May 2023 03:55 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே தோ்தல் முன்விரோதம் தொடா்பாக ஊராட்சிமன்ற பெண் உறுப்பினரை வீடு புகுந்து தாக்கியது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் முருகன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த அமிா்தராஜ் மனைவி கோமதி (33). புங்கனூா் ஊராட்சி 2- ஆவது வாா்டு உறுப்பினா். இவருக்கும், இவரிடம் தோ்தலில் தோற்ற

அதே பகுதியைச் சோ்ந்த மு. பால்ராஜ் (45) என்பவரும் இடையே தோ்தல் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், மு. பால்ராஜ், அவரது மகன் மனோஜ் (25 ) மற்றும் உறவினா் சிவா (எ) சிவகுமாா் (50) ஆகியோா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோமதியின் வீட்டில் புகுந்து அவரை தாக்கினாா்களாம். இதை தட்டிக்கேட்ட கோமதியின் உறவினா் தவமணி( 40 ) என்பவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனா். தாக்குதலில் கோமதி, தவமணி ஆகிய இருவரும் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கோமதி அளித்த புகாரின்பேரில், பால்ராஜ், அவரது மகன் மனோஜ், சிவா ஆகியோா் மீது சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, சிவாவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான தந்தை-மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT