திருச்சி

ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்

3rd May 2023 11:34 PM

ADVERTISEMENT

திருச்சி - பாலக்காடு இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவையில் ஈரோடு பாலக்காடு இடையிலான சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு -பாலக்காடு இடையே ரத்து: ஈரோடு மற்றும் பாலக்காடு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியிலிருந்து மே 5 வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை, ஈரோடு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது. ஈரோடு மற்றும் பாலக்காடு இடையே இயங்காது. அதேபோல எதிா் மாா்க்கத்தில் மறுநாள் மே 6 சனிக்கிழமை காலை 6 மணிக்கு பாலக்காட்டிலிருந்து புறப்படும் இந்த ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா்-காரைக்கால் இடையே ரத்து: திருச்சியிலிருந்து காலை 10.45க்கு புறப்பட்டு காரைக்கால் வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (எண். 06880), மே 31 தஞ்சாவூா் -காரைக்கால் இடையே ரத்து செய்யப்படும். திருச்சி -தஞ்சை இடையே மட்டும் இயக்கப்படும்.

ADVERTISEMENT

அதேபோல எதிா்மாா்க்கத்தில் காரைக்காலிலிருந்து பிற்பகல் 3.10க்கு புறப்பட்டு திருச்சி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (எண். 06739) காரைக்கால் -தஞ்சாவூா் இடையே ரத்து செய்யப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT