திருச்சி

லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோயில் குடமுழுக்கு

3rd May 2023 11:43 PM

ADVERTISEMENT

திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறை காவிரிக் கரையில் உள்ள லட்சுமி நரசிங்கப் பெருமாள் (ஆற்றழகிய சிங்கப் பெருமாள்) கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த திங்கள்கிழமை மகா சுதா்சன ஹோமம், தொடா்ந்து அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், தீா்த்தக் குடம் எடுத்தல் நிகழ்வு, மாலையில் மஹா சங்கல்பம் நடைபெற்றது.

இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை முதல் யாகசாலை பூஜைகள், பிற்பகல் அனைத்து மூா்த்திகள் விமான கலச ஸ்நபன திருமஞ்சனம், மாலை 6 மணி முதல் 9 மணி வரை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் சுப்ரபாதம் விஸ்வரூபம் துவார, கும்ப மண்டல, ஆராதனம் சாந்தி, பிராயசித்த ஹோமம், மகாபூா்ணாஹூதி நடைபெற்றது. யாத்ரா தானம், கும்போத்தாடனம் நடைபெற்றவுடன் கலசங்கள் புறப்பாடாகியது. காலை 6:30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விமான சம்ப்ரோக்ஷணம் மூலஸ்தான சம்ப்ரோஷனம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் தலைமையில் குடமுழக்கு விழா நடைபெற்றது. பின்னா் லட்சுமி நரசிங்க பெருமாளுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடா்ந்து சாற்றுமுறை நிவேதனம், கோஷ்டி மரியாதை, ரக்ஷாபந்தன விசா்ஜனம், உபயதாரா் மரியாதை, பொதுஜன சேவை நடைபெற்றது. மாலை உற்ஸவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பல்லக்கில் வீதி உலா வந்து சேவை சாதிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT