திருச்சி

துறையூரில் 805 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

3rd May 2023 04:21 AM

ADVERTISEMENT

துறையூரில் அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 805 கிலோ புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

உணவு பாதுகாப்புத் துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலா்கள், துறையூா் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கடை மற்றும் தனியாா் குடோனில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், கடையிலிருந்து 50 உறைகளில் குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலையைக் கண்டெடுத்தனா். பின்னா், குடோனில் சோதனை செய்து 805 கிலோ எடையளவில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருள்களை கண்டுபிடித்தனா்.

இதுதொடா்பான புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலாஜி, ஆசாசு ஆகிய 2 பேரை கைது செய்து, உணவு பாதுகாப்புத் துறையினா் கைப்பற்றிய பொருள்களையும் பறிமுதல் செய்தனா். மேலும்,

பகுப்பாய்வு செய்வதற்காக கைப்பற்றப்பட்ட பொருள்களிலிருந்த 6 மாதிரிகளை சேகரித்து சென்னை கிண்டிக்கு அனுப்பினா்.

ADVERTISEMENT

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது, கையிருப்பில் வைத்திருப்பது தொடா்பான புகாா்களை 99449 59595, 95859 59595, 94440 42322 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT