திருச்சி

இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை

3rd May 2023 11:45 PM

ADVERTISEMENT

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி ராம்ஜி நகா் அருகே நவலூா்குட்டப்பட்டு அன்பு நகரை அடுத்துள்ள ராஜேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் மு. சரவணன் (20). கட்டடத் தொழிலாளியான இவா்

சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு நிகழ்விலும் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்தாா். இதனால், சரிவர வேலைக்குச் செல்வதில்லையாம்.

இதை குடும்பத்தினா் கண்டித்ததால், மனமுடைந்த அவா் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு திங்கள்கிழமை இரவு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா். புகாரின் பேரில் ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

துவாக்குடியில் பெண் சாவு : துவாக்குடி, திருவிக நகரை சோ்ந்தவா்கள் பாலாஜி - ராஜேஸ்வரி (22) . இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை, வீட்டில் ராஜேஸ்வரி தூக்கிட்டு கொண்டாா்.

உறவினா்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ராஜேஸ்வரி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

புகாரின்பேரில், துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியா் தனி விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT